
குறிப்பிட்ட இடத்தில் அப்போது ராணுவப் பிரிவு ஒன்றுக்கு பொறுப்பாளராக , இருந்தவர் தான் இந்த மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா. இதனை ஐ.நா வின் அதிகாரியான விஜய் நம்பியார் நன்றாக அறிவார். கிருசாந்த டி சில்வா பொறுப்பாக இருந்த ராணுவ முகாமுக்கே வெள்ளைக்கொடியோடு இவர்கள் சென்று சரணடைந்தார்கள். கோட்டபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் , கிருசாந்த டி சில்வாவே புலிகளின் பிரமுகர்களை மற்றும் நடேசனின் மனைவி ஆகியோரைக் கொன்றார் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த மெரியா கொல்வில் அம்மையார் இறந்துவிட்டார்.
மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அவர் லெப்டினன் தரத்திற்கும் பதவிஉயர்த்தப்பட்டுள்ளார். தற்போதுள்ள இராணுவ அதிகாரிகளில் அனுபவம் கூடியவரான இவரையே கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல அனுப்பியிருந்தார். இதனடிப்படையிலேயே அவர் பின்னர் வெளிநாட்டு தூதுரகமொன்றிற்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி எவ்வாறு போர்குற்ற விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க முடியும் ?

No comments:
Post a Comment