Tuesday, February 24, 2015

யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுக்கை!! நூற்றுக்கணக்கானோர் கைது !!

இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா சபை தாமதமின்றி  போர்க்குற்ற விசாரணை அறிக்கை உடனே வெளியிடக் கோரி  யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம். யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் சமநேரத்தில் நடைபெற்ற முற்றுக்கைப் போராட்டத்தில் நூற்றிக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை  மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும்  நீதிக்குமான கோரிக்கைகள் இந்த ஆட்சி மாற்றத்தால் மீண்டும்  பின்தள்ளப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை , 28வது மார்ச் மாத கூட்டத் தொடரிலே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் ஆட்சிமாற்றம்  காரணமாக  போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை  மேலும் ஆறு மாதம் ஒத்­தி­வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முடி­வெ­டுத்­துள்­ளதாகக் கூறப்­ப­டு­கின்­றது. தாமதிக்கப்பட்ட நீதி தொடரும் குற்றச்செயல்களை ஊக்குவிக்கும். மேலும் இது அநீதிக்கு சமமாகவே கருதப்படும்.

இலங்கையில்  நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான  ஐ.நா மனித உரிமைகள்  சபையின்  போர்க்குற்ற அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என  வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படுவது வரவேற்கக்கூடியது. இம்முயற்சி மக்களின் சுதந்திர தமிழீழத் தாகத்தையே வெளிப்படுத்துகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், காலம் தவறாமல் மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அனைத்து தமிழ் மாணவர்கள் , இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்கள் சார்பில் இன்று  சென்னையில் உள்ள  ஐ.நா அலுவலகத்தின் முன்பு  நாம் ஒன்று கூடியுள்ளோம்.








மேலும், நாம் வலியுறுத்துவது:

1) இலங்கை அரசினால் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இனஅழிப்பை ஐ.நா சபை உடனடியாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

2) ஐ.நா சபை காலத் தாமதமின்றி இனப்படுகொலை தொடர்பாக நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வருகின்ற மார்ச் மாத கூட்டத்தொடரிலேயே வெளியிடப்பட வேண்டும்.

3) தமிழீழ மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க, சுதந்திர தமிழீழம் அமைய பொது வாக்குக்கெடுப்பை விரைவில் நடத்த ஐ.நா முன்வரவேண்டும்.

4) தமிழீழ மrக்களின் நல்வாழ்விற்காகவும் விடுதலைக்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழீழ மக்களின் தேசிய ராணுவமாக அங்கீகரிக்க வேண்டும்.

நன்றி ,

தமிழ் மாணவர்கள், இளைஞர்கள்,தொழிலாளர்கள் மற்றும் உணர்வாளர்கள்
source:pathivu

No comments:

Post a Comment