
மைத்திரியின்
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்ட
காணி உறுதிகளில் முன்னாள் ஜனாதிபதியின் கையொப்பமும்
படமும் உள்ளது. இந்த காணி உறுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி மஹிந்த
ராஜபக்ஷே ஜனாதிபதியாக இருக்கும் போதே கையொப்பம் இடப்பட்டு விட்டது.
ஆனால் 3 மாதங்கள் கடந்த நிலையில் இன்றைய தினமே அவை
மக்களிடம் கையளிக்கப்பட்டது.இந்த கால தாமதத்திற்கான காரணம் அறிய
முடியவில்லை.
யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளில் நீண்ட காலமாக
குடியிருந்த 191 பேருக்கு இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் காணி உறுதிகள் வழங்கப்பட்டது. கோப்பாய்
பிரதேச செயலக பிரிவில் 50 பேருக்கும் சாவகச்சேரி
பிரதேச செயலக பிரிவில் 91 பேருக்கும் மருந்தங்கேணி
பிரதேச செயலக பிரிவில் 40 பேருக்குமே முன்னாள்
ஜனாதிபதியின் கையொப்பத்தினொடு உறுதிகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment