
இந்நிலையில் இன்று நாராஹென்பிட்டியவில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட ஶ்ரீசுக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, நீதிமன்றம் சந்திரிக்காவிற்கு மாத்திரமே தீர்ப்பு வழங்கியதாகக் கூறினார். இதேவேளை, இரத்தினபுரியில் இடம்பெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, ஜானக வக்கும்புர, ரஞ்சித் சொயிசா, ரொஷான் ரணசிங்க, ஜானக பண்டார, உதித் லொக்குபண்டார ஆகியோர் அறிவித்துள்ளனர்.source:athirvu
No comments:
Post a Comment