Monday, March 09, 2015

இரவோடு இரவாக சமரசம் பேச லண்டனில் அலையும் மைத்திரியின் சகா !

தற்போது லண்டனில் தங்கி இருக்கும் , இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால , நாளை காமன்வெலத் நாடுகளின் அலுவலகம் செல்லவுள்ளார். அந்த வேளை(மாலை 5.00மணிக்கு) தமிழர்கள் கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். TCC என்று அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இந்த ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். இதேவேளை நாம் ஏன் இவர்களோடு இணைந்து செய்யவேண்டும் ? என்று கருதிய பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) பிறிதொரு இடத்தில் ஆர்பாட்டம் என்று அறிவித்தார்கள். ஒட்டு மொத்தத்தில் இதிலும் ஒற்றுமை இல்லை. போட்டியாக வேறு ஒரு இடத்தில் போராட்டம் நடக்கும் என்கிறார்கள் BTF குழுவினர்.

இது இவ்வாறு இருக்க , BTF குழுவினர் அடங்கிய அனைத்து பாராளுமன்ற குழுவினர் மைத்திரியை சந்திக்கவுள்ளார்கள் என்ற ரகசிய தகவலும் அதிர்வுக்கு கசிந்துள்ளது. அதாவது ஒரு பக்கம் மைத்திரிக்கு எதிராக ஆர்பாட்டம் என்கிறார்கள். மறு பக்கம் பாராளுமன்ற குழுவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளார்கள் BTF குழுவினர். இது இவ்வாறு இருக்க நாளை TCC யால் நடத்தப்படவுள்ள பாரிய ஆர்பாட்டத்தை , எப்படியாவது நிறுத்த முடியாதா ? என்று மைத்திரி ஆதரவாளர்கள் லண்டனில் சுற்றிவருகிறார்கள். மைத்திரி முதன் முதலாக லண்டன் வந்துள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் ஆர்பாட்டம் நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
குறிப்பிட்ட சில தமிழ் முக்கியஸ்தர்களோடு இரவில் பேசி , இந்த ஆர்பாட்டத்தை நாளை நிறுத்தும் நோக்கில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்தத்தில் மைத்திரி இன்று நின்மதியாக லண்டனில் தூங்க முடியாது போல இருக்கே ?
source:athirvu

No comments:

Post a Comment