Monday, March 09, 2015

சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?

Ltte-02இந்தப் பூமி பந்தின் அசைக்க முடியாத சக்தியாக, ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன் பலம் மிக்க அமைப்பாக தமிழர் சேனை 30 வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு
மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது??
இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத சதி வலைகள் பின்னப்பட்டிருந்தது. முக்கியமாக மூன்று நாடுகளின் கரம் நீண்டிருந்தது அதை ஒவொன்றாக பார்ப்போம்.


ltte-06

ஒரு நேரிய பாதை எம் இளைய சந்ததிக்கு தோன்ற வேண்டும் என்பதால் எமது அழிவுக்கான காரணங்களை உங்களோடு பகிர விளைகின்றேன்.! “நாம் விட்ட தவறை சரியாக இனம் கானது விட்டால் மீண்டும் அதே தோல்வியை நாம் சந்திக்க வேண்டி வரும்” என்பதே உண்மை.!

2002 இல் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே 2003 இல் முதலாவது புலிகளின் கப்பல் எதிரியால் தாக்கி அழிக்கப் பட்டது. அதன் பின்பும் 2 கப்பல்கள் தாக்கி அழிக்க பட்டது. 2002இன் பின் கனேடிய நிறுவனம் ஒன்றின் ஊடாக வாங்கிய சற்றலைட் அலைபேசிகளையே புலிகள் பயன் படுத்தினர். இந்த வசதி இலவுவாக இருந்தமையாலும் இதை எதிரி “ட்ரக்”பண்ண அடி இலக்கம் அவனுக்கு தெரியாது என்னும் துணிவில் பரவலான பாவனையில் இருந்தது. இதை எப்படியோ கனேடிய உளவுத்துறை மோப்பம் பிடித்து விட்டிருந்தது (பெரும்பாலும் CIA கண்ணை காட்டி இருக்கலாம்) அவர்கள் அந்த இலக்கங்களை பெற்று எதிரியின் உளவுத்துறையான SIS க்கு 2003 இல் கொடுத்து விட்டது.

ltte-03

இதை தொடர்ந்து அவர்கள் எங்களை ஒசைபடாது “மொனிடர்” பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதன் ஒரு அங்கமாக தான் கனடாவின் துரோகத்தால் 2003 இல் முதல் கப்பலும் அதை தொடர்ந்து இரண்டு கப்பலும் அழிக்க பட்டது.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் லண்டன் நிறுவனம் ஒன்றின் ஊடாகவும் தொலைபேசிகள் வாங்க பட்டது அவையும் MI5 மோப்பம் பிடித்து அதையும் எதிரிக்கு கொடுத்திருந்தது. தொலைபேசி கொள்முதல்கள் நடக்கும் போது எந்த உளவுத்துறைகளும் தடுப்பதில்லை காரணம் அதன் இலக்கம் பெற்று மொனிட்டர் பன்னுவதற்காக.!

Ltte 01

இப்படி இருக்கும் போது 2006 இல் நோர்வேயில் வைத்து பேச்சு வார்த்தை முறிவுண்டபின், நோவேயால் எச்சரிக்க பட்டு எமது பேச்சு வார்த்தை குழு நாடு திரும்பியது. நோவேயின் எச்சரிக்கை அமெரிக்காவின் எச்சரிக்கையே.!
நோர்வேயின் பின்னால் இருந்தது அமெரிக்கா என்பது ஊர் அறிந்த ரகசியம். அமெரிக்காவின் இரட்டை கோபிர தாக்குதலின் பின் விடுதலை அமைப்புகள் குறிப்பாக தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் அமைப்புகள் தடை செய்த பின் எம்மை கண்காணிக்கவென புதிய இலாகா ஒன்று உருவாக்க பட்டு 24 மணி நேரம் கண்காணிக்க பட்டு எமது பலம் பலவீனம் ஆராயப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது CIA கழுகு பார்வை எங்கள் மேல் விழுந்திருந்தது. இது இப்படியே இருக்கும் போது 2006 இல் சண்டை ஆரம்பமானவுடன் சர்வ தேசம் ஒதுங்குவதாக வெளியில் கூறியது. சண்டை ஆரம்பமானவுடன் எமக்கு வெற்றியை தீர்மானிக்க வேண்டிய நேரத்தில் ஆயுதங்களுடன் நின்ற நான்கு “கார்கோ” கப்பல்களை இந்து சமுத்திரத்தில் இகுவேட்டர் கோட்டோடு வைத்தே,சர்வ தேச விதிமுறைகளை மீறி தாக்கி அழித்தான் எதிரி.!

ltte-05

அத்தோடு எமக்கான ஆயுத வளங்கள் இல்லாது போனது.! இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் பற்றியும், சிங்கள அரசின் “வெளித் தொடர்பு” பற்றியும் தகவல் திரட்டும் படி தேசியத் தலைவரால் பணிக்கபட்டு தமிழர் உளவமைப்புகள் களத்தில் இறக்கி விடப் பட்டது. சரியான தகவல் எமக்கு கிடைக்கும் போது எல்லாம் எம் கையை விட்டு போயிருந்தது.
எதிரிக்கு தெரிந்த பின் எதுவும் ரகசியம் என்று இங்கு இல்லை . அத்தோடு புலிகளின் ஆயுத வளங்கள் வலையமைப்பும் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதது. எதிரியால் இது எப்படி சாத்தியமானது என்று ஒரு குழப்பம் எமக்கு இருந்தது, உங்களுக்கும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.இதைத் தெரிந்து கொள்ள புலிகளின் ஆயுத “நெட்வொர்க்” எப்படி இயங்கியதென்று நீங்கள் அறிய வேண்டும்.
புலிகளால் இந்தோனேசியா தாய்லாந்து போன்ற நாடுகளே தளமாக பயன் படுத்தப் பட்டது. இதில் இந்தோனேசியாவில் தான் ஆயுதம் தவிர்ந்த பொருட்கள் களஞ்சிய படுத்த பட்டது. கப்பல் மாலுமிகள் தங்குவதும் அங்கு தான். ஆயுதங்கள் அங்கு வைத்து ஏற்றப்படுவதில்லை அதனால் இந்தோனேசிய அரசாங்கமும் இதை கண்டுகொள்வதில்லை. அதனால் மருந்து பொருட்கள் உதிரிப்பாகங்கள் அது போன்ற பொருட்கள் அங்கேயும், தொலை தொடர்புகருவிகள் மலேசியாவிலும், கடற்புலிகலுக்கான வெளியிணைப்பு இயந்திரங்கள், கதுவிகள் (radar) போன்றவை ஜப்பானிலும் வாங்கி இங்கு கொண்டுவந்து களஞ்சியப் படுத்தப்படும்.

ltte-08

இந்தப் பொருட்களை “கார்க்கோ” கப்பலில் ஏற்றிய பின் கப்பலை வெளியில் கொண்டு செல்வதற்கு இந்தோனேசிய கஸ்டம் அதிகாரிகள் கிளியரன்ஸ் கொடுக்கப்படும். அங்கிருந்து வடகொரியா சென்று (இறுதி நேரத்தில் அவர்களே சப்ளை செய்தார்கள்) ஏற்றும் ஆயுதங்களுடன் “கார்கோ கப்பல்” புறப்படும். (இதற்கான பணத்தை தாய்லாந்தில் வைத்து அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றபடும்) சிலவேளைகளில் கொரியர் கடலில் வைத்து மாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளது இது நிலைமைக்கு ஏற்றால் போல மாறும். இந்த நடைமுறையை உலகம் பூராவும் முகவர்களை பரப்பியுள்ள CIA கண்டு பிடித்திருந்தது. (இந்தோ அரசாலும் சொல்ல பட்டிருக்கலாம்) அதன் பின்பு எமது கப்பல் நடமாட்டங்களை சற்றலைட் கண்காணிப்பில் கொண்டு வந்தது.
இதன் பின் இந்தப் பொருட்கள் எப்படி ஊர் போய் சேர்ந்தது?

புலிகளின் ஆயுத வளங்கள் மூன்று பிரிவாக நடக்கும் முதலாவது “கார்கோ” கப்பல்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இந்து “சமுத்திரத்தில் இகுவேட்டர் கோட்டோடு” வந்து நிற்கும். இரண்டாவதாக எங்களது “டேங்கர் கப்பலளுக்கு”மாற்றப்படும் (ஒரு கார்க்கோ கப்பலில் வரும் பொருட்கள், 7 இல் இருந்து 10 டேங்கர் கப்பல்களில் ஏற்றப்படும்) இந்த கப்பல்கள் கிழக்கு கரைகளில் இருந்து (மட்டக்களப்பு) 300கடல் மைல்களுக்கு அப்பால் தரித்து நிக்கும்.

ltte-09

மூன்றாவதாக கடற்புலிகளின் வினியோக படகுகள் மற்றும் பெரிய மீன் பிடி றோலர்களின் அவை ஏற்றபட்டு கரையை அடையும். இதுவே நடை முறையாக இருந்தது.! இதில் உள்ளதை பார்க்கும் போது எதோ கடையில் போய் பொருட்கள் வாங்குவது போல இலவுவாக தெரியும் நிச்சயமாக அது அப்படி இருக்காது. இதற்குப் பின்னால் பல நூறு போராளிகள், மக்களின் தியாகங்கள் நிறைந்துள்ளது.
இப்படி இருக்கும் போது இதற்கு முன்னரான காலங்களில் “டேங்கர்” ரக கப்பல்களே தாக்குதல்களில் சிக்கியிருந்தது. அப்போது தான் ஒரு பெண் அதிகாரியின் தலைமயில் நான்கு பேர் கொண்ட CIA அதிகாரிகள் இலங்கை வந்து கடற்படை அதிகாரி வசந்த கர்னகொடவை சந்தித்து புலிகளின் ஆயுத வளங்களின் பின்னணி பற்றியும், நடைமுறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.
அத்தோடு இவர்கள் தாக்கி அழிக்கும் கப்பல்கள் ஆலமரத்தின் விழுதுகள் போன்றது அதை அழிக்க அழிக்க புலிகள் மீண்டும் புதிதாக வாங்குவார்கள்.! அதனால் அதன் வேர்கள் இருக்கும் (“கார்க்கோ கப்பல்கள்”) இடத்திற்கான “சற்றலைட்” படங்களை கொடுத்து (இந்த படங்களின் பிரதி புலிகளின் உச்ச புலனாய்வின் ஊடாக பெறப்பட்டு தலைமைக்கு கொடுக்கப்பட்டது) நான்கு கப்பல்களையும் இனம் காட்டி கொடுத்திருந்தது. அத்தோடு தமது செய்மதியில் தொடந்து கண்காணித்து வருவதையும் கூறி, அதை அழிப்பதற்கான பொறிமுறையையும் உருவாக்கி கொடுத்தது.

Ltte-02

சர்வதேச கடலில் ஒரு கப்பலை தேடுவது என்பது வைக்கோல்போரில் குண்டூசியை தேடுவது போன்றது. ஒரு கப்பல் புறப்படும் இடத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்கானித்தால் மட்டுமே அதை இனம் காண முடியும். சர்வதேச கடலில் ஆயிரகணக்கில் கப்பல்கள் நடமாடும், அதனால் சிங்கள அரசால் CIA இன் உதவி கோரப்பட்டது. அதன் படி அவர்களின் சற்றலைட் உதவியுடன் எதிரியின் நான்கு சண்டை கப்பல்கள் புறப்பட்டது (சயூரா-p 714, சமுதுரா p-621, சக்தி- L880, சுரனிமாலா-P702) இந்த தாக்குதலுக்கு வழிநடத்திச் சென்ற கட்டளை அதிகாரி D.L.சின்னையா என்ற ஒரு தமிழன்.! இந்த துரோகியால் மூன்று கப்பல்கள் அழிக்க பட்டது ஒன்று தப்பி சென்றது.
மீண்டும் முன்று வாரங்களின் பின் CIA இன் ஒரு வழிகாட்டலில் அந்த கப்பலும் மூழ்கடிக்க பட்டது. அத்தோடு கடல் ஆயுத வளங்கள் “நெட்வொர்க்” உடைந்து போனது. அதன் பின் 2008 இல் பொட்டம்மானின் நேரடி கண்காணிப்பில் ஆகாய மார்க்கமாக ஆயுதம் இறக்க முயற்சி செய்யப்பட்டு தவறிப்போனது அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.!
CIA கடல் வளங்களை தடுத்தது போல பிரித்தானியாவின் MI6 எமது கொழும்பில் இருந்த புலனாய்வு கட்டமைப்பை அடியோடு அழித்தது. ஆயுத வளங்கள் கிடைக்காமையால் புலிகள் படையணிகள் பின்வாங்கி கொண்டிருந்தன. அப்போது சண்டையை நிறுத்தி வைப்பதற்கு கடைசியாக இருந்த தெரிவு எதிரியின் பெரும் இலக்குகளை அழிப்பதே… அதற்காக ஆயத்தங்களில் புலனாய்வு போராளிகள் களமிறக்க பட்டனர்.

ltte-04

அதற்கான கட்டளைகள் லண்டனில் இருந்தே போய்க்கொண்டிருந்தது. வன்னியில் இருந்து லண்டன் வரும் அலைபேசி அழைப்புகள் லண்டனில் வைத்து சிறிய தொழில் நுட்பத்தின் ஊடாக கொழும்புக்கு திருப்பி விடப்படும். அப்போது அந்த அழைப்பு லண்டனில் இருந்து வருவது போல இருக்கும் எதிரி சந்தேகப்படாத பொறிமுறை.
இதை எதிரி அறியாததால் நாங்களும் பல வருடங்கள் புலிகள் பூந்து விளையாடினர். இதை மணந்து பிடித்த பிரிட்டிஸ் உளவுத்துறையான MI6 இதனோடு சம்மந்த பட்டோரை கண்காணித்து கொண்டிருந்தது எமக்கு தெரியாது. அதன் படி லண்டனில் இருந்து கொழும்புக்கு பேசிய இலக்கங்களை “ட்ரக்பன்னி” SIS க்கு கொடுத்தது. 20 வருடங்களாக கண்ணுக்கு தெரியாத புகை போல இருந்த புலிகளது உளவு வலையமைப்பு உள்ளங்கை ரேகை போல வந்திருந்தது எதிரிக்கு.
சர்வதேச உளவு அமைப்புகளுடன் ஒப்பிடும் போது எல்லா திறமையிலும் உச்சத்தில் இருந்தோம். தொழில் நுட்பத்தில் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தோம், அதுவே எங்கள் பலகீனமாகி விட்டிருந்தது.
சர்வதேசத்தின் தொழில்நுட்ப வளச்சியின் முன்னால் புலிகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எந்தவித நாடுகளின் உதவியும் இல்லாது எமது மக்களின் உதவியுடன். மக்கள் பாவனை பொருட்களை கொண்டு அதன் உச்ச பயன் பாட்டை பெற்றோம்.
ஆனால், சர்வதேச உளவு அமைப்புகள் எதிரியுடன் கைகோர்த்து நடக்கத் தெரியாத எதிரியை கையை பிடித்து முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்து விட்டிருந்தது.!

ltte-07

முள்ளிவாய்கால் இறுதி நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன் எதிரியின் பெரும் “தலைகள்” இலக்கில் இருந்த போது கடைசி நேரம்……. மீண்டும் MI 6 கொடுத்த தகவல் மற்றும் இலக்கத்தை வைத்து புலிகளின் முக்கிய உறுப்பினர் ஐயா பிடிபட அவர் மூலமாக எதிரியின் அணியில் இருந்த எமது பிரிகேடியர் தர இராணுவ உளவாளியின் கைதோடு அந்த கடைசிநேர “உறுதியான” வாய்ப்பும் கையை விட்டு போக 18,19 வருடங்களாக மறைப்பில் இருந்த போராளிகளுக்கும் கைதுகளும், குப்பி கடிப்புகளும் வழமையானது.
அவர்கள் கொடுத்த 15 க்கு மேற்பட்ட இலக்கங்களை வைத்து எல்லோரும் இரகசியமாக வேட்டையாடப் பட்டார்கள். இதன் ஊடே குறிப்பிட்ட சிலரே தப்ப முடிந்தது.! MI 6 தன் தமது இரட்டை (லண்டன்) வேடத்தை கட்சிதமாக முடித்திருந்தது.!
இது இப்படி இருக்கும் போது இந்தியா தன் பங்கிக்கு (தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய கூடாதென்பதற்காக ) மறைமுகமாக செக்குடியரசு ஊடாக “மல்டிபெரல்” (MBRL ) மற்றும் அதற்கான செல்களும் (100000) தனது செலவில் கொடுத்தது. 2000 இல் செக் குடியரசு “நேட்டோவில்” (NATO) இணைந்த போது விதிக்கபட்ட நிபந்தனைகளில் ஒன்று செக்குடியரசின் இராணுவத்தில் உள்ள MBRL (multi barrel rocket) அகற்றப்பட வேண்டும் என்பதே. அதை அழிக்க விரும்பாத செக்குடியரசு இது பற்றி இந்தியாவுக்குக் கூறியது.
(இந்தியாவுடன் இராணுவ நெருக்கமுள்ள நாடு செக்குடியரசு) அந்த நேரத்தில் புலிகள் யாழை கைப்பற்றும் இறுதிக் கட்டத்தில் இருந்தனர்.
உடனே அதை சிங்கள அரசுக்கு கொடுக்க பரிந்துரை செய்து நேரடி கண்காணிப்பில் வேண்டி கொடுத்தது. அதன் பின் நடந்தது உங்களுக்கு தெரியும். இறுதி யுத்தத்தின் போது அந்த MBRL இன் செல்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதட்கும் ஒழுங்கு செய்து கொடுத்தது. அத்தோடு தமிழ் நாட்டு Q பிரிவை வைத்து மருந்து, எரிபொருள், அத்தியாவசிய எந்தப் பொருளும் போகாது பாத்துக் கொண்டது.! சீனாவும், இந்தியாவுக்குப் போட்டியாக அதுவும் செய்மதி தகவல் உட்பட கனரக ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்தது.
நான் ஏன் சும்மா இருப்பான் “எதுக்கும் ஒரு துண்டை போட்டு வைப்போம்” என்று பாக்கிஸ்தானும் தன் பங்கிக்கு அள்ளி கொட்டியது. இப்படி 20 நாடுகளின் உதவியுடன் (கோத்தபாய தன் வாயால் கூறியது) பெற்ற வெற்றியை தான் எதிரி மார் தட்டுகிறான்.!!!
என்னைப் பொறுத்தவை இவ்வளவு நாடுகளையும் 3 வருடம் நாம் தாக்குபு பிடித்ததே தமிழனின் வீரம் தான்.
எதிரிக்குத் தெரியும்… தான் மட்டும் மோதியிருந்தால் என்னவாகி இருக்கும் என்று.! 30 வருடம் அந்த பாடம் தானே எம்மிடம் எதிரி தினம்… தினம் படித்தான்.!!!
ஒரு நாதியற்ற சிறுபான்மை இனத்தை அழிக்க எத்தனை வல்லரசுகள்.? எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
ஒன்று மட்டும் உறுதி எமக்கு எம் கையே உதவி.!!!!
- ஈழத்துத் துரோணர்
Posted by தமிழீழத்திலிருந்து திலீபன் on March 1st, 2015  
source:sankathi