பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில்
67 வருடமாக இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு நீதி
வேண்டியும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள (OISL)
விசாரணைக்குழு தனது விசாரணைஅறிக்கையை உடன் வெளியிட வேண்டும் எனக்கோரியும் ,
தமிழின அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை
வலுயுறுத்தியும், நேற்று புதன் கிழமை(29.04.2015) பிற்பகல் 16.00 மணியளவில்
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனஈர்பு
போராட்டம்நடைபெற்றது.
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும்
தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.


3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு நிரந்தர தீர்வான தமிழீழத்தைப் பெற்றுத் தரக் கோரியும், ஸ்ராஸ்பூர்க் தமிழீழ மக்கள் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனஈர்புபோராட்டத்தை நடாத்தியிருந்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
source:pathivu

No comments:
Post a Comment