
தமிழர் விடியல் கட்சி மே மாதத்தை "தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும்
போராட்ட மாதம்" என்று அறிவித்ததை தொடர்ந்து நேற்று (5/05/15) மாலை கோவையில்
உள்ள சிங்கள வணிக நிறுவனமான "டாம்ரோ பர்னிச்சர் (DAMRO FURNITURES)"
கடையை முற்றுகையிட முயன்றனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை கைது
செய்தனர்.
இந்த போராட்டத்தை கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன் முன்னிலை
வகிக்க, மாநில ஒருங்கிணைப்பாளர் உ. இளமாறன் தலைமை தாங்கினார்.
தமிழர் விடியல் கட்சி இந்த முற்றுகை போராட்டத்தை அறிவித்ததை ஒட்டி, நேற்று
ஒரு நாள் முழுக்க அந்நிறுவனம் கடையை அடைத்துவிட்டனர். . இதே போல் நாம்
தொடர்ந்து போராடினால் இனப்படுகொலை இலங்கை நிறுவனங்களை தமிழ் மண்ணிலிருந்து
முழுமையாக அகற்றிவிடலாம்! என தமிழர் விடியல் கட்சியினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment