Friday, May 08, 2015

சிறிலங்காவை புறக்கணித்து இந்தியாவை நாடும் சீனா

இந்து சமுத்திரத்தின் கடற்படுக்கை ஆய்வு தொடர்பில், சீனா சிறிலங்காவை புறக்கணித்து இந்தியாவை கூட்டு சேர்க்க முன்வந்துள்ளது.

இந்தியாவின் டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும் வளர்முக நாடுகள் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்படுவது நன்மை தரும் என்று, சீனாவின் கடல் கணிமவள ஒழுங்கமைப்பின் பிரதி பணிப்பாளர் ஹீ சொங்யு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதை அடுத்து, சினாவின் பல வேலைத்திட்டங்கள் தொடர்வில் கேள்வி எழுந்துள்ளன.

இந்த நிலையில் இந்த வேலைத்திட்டத்தை சிறிலங்கா ஊடாக முன்னெடுக்க முடியாது என்று சீனா கருதுவதாக அந்த ஊடகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே சீனா இதற்கு இந்தியாவை நாடி இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment