காட்டுசட்டங்களை அமுல்படுத்த முடியாது என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு
குழு கூட்டத்தில், யாழில் தற்போது வாள்வெட்டு கலாச்சாரம் போதைப்பொருள் பாவனை என்பன அதிகரித்து காணப்படுகின்றது.
அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கோரிக்கை விடுத்து இருந்தனர்அத்துடன், விடுதலை புலிகள் காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லாமல் இருந்தது அதற்கு அவர்களின் கடுமையான சட்டங்களும் , தண்டனைகளுமே காரணம் எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வாள்வெட்டு கலாச்சாரம் போதைப்பொருள் விற்பனை என்பவற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்காக நாட்டு சட்டங்களை மதிக்காது காட்டு சட்டங்களை அமுல்படுத்த முடியாது என தெரிவித்தார்.
source:athirvu
No comments:
Post a Comment