Wednesday, June 10, 2015

இலங்கை போர் குற்றத்தை உதாரணமாக வைத்து மோபைல் அப்பிளிகேஷன் தாயாரிக்கப்பட்டுள்ளது !


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்க புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்று வரும் நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான ஆதாரங்களை திரட்டி பகிரக் கூடிய வகையில் இந்த மொபைல் அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.இலங்கை யுத்தத்தின் போது கையடக்கத் தொலைபேசி மூலம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டே புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கையடக்கத் தொலைபேசி வீடியோ ஆதாரங்கள்
அண்மைக் காலகமாக சமூக ஊடகங்களில் பிரசூரிக்கப்பட்டு வருகின்றது.
எனினும், இந்த வீடியோ ஆதாரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியாத நிலைமை நீடிப்பதுடன் இதனை நீதிமன்றில் ஓர் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.ஆதாரங்கள் போலியானவையா உண்மையானவையா என்பதனை உறுதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச சட்டத்தரணிகள் ஒன்றியம் இந்த மொபைல் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பிலான நேரில் கண்ட சாட்சியங்கள் என்ற அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அப்ளிகேசன் பயனரின் இடம், பதிவு செய்யப்பட்ட காலம்,நேரம், அருகாமையில் உள்ள வைபை வலையமைப்பு போன்ற விபரங்கள் திரட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஆதாரம் திரிபுபடுத்தப்படாதவை என்பதனை உறுதி செய்யும் வகையில் இந்த அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அருகாமையில் உள்ள வைபை வலையமைப்புடன். தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு திரட்டப்படும் ஆதாரங்கள் சர்வதேச சட்டத்தரணிகள் பேரவையின் தரவுத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட முடியும். இந்த புதிய மொபைல் அப்ளிகேசன் யுத்தக் குற்றச் செயல்களை தடுக்க மிக முக்கியமான ஓர் காரணியாக அமையும் என நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்க் எலிஸ் தெரிவித்துள்ளார்.கையடக்கத் தொலைபேசி வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இந்த புதிய அப்ளிகேசன் உதவும் என குறிப்பிட்டுள்ளார். மொபைல் ஆப்ளிகேசன் ஊடாக திரட்டப்படும் வீடியோ ஆதாரங்களை ஊடகங்கள் சந்தேகமின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் செனல்4 ஊடகம் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.
இலங்கைப்படையினர் தமிழ் கைதிகளை துன்புறுத்தும் காட்சிகளை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படம் போலியானது என இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.கடந்த நவம்பர் மாதம் சிரியன் ஹிரோ போய் என்ற ஆவணப்படம் மில்லியன் கணக்கான யூடியூப் பயனர்களினால் பார்வையிடப்பட்ட போதிலும் அது உண்மையற்றது என்பது பின்னர் கண்டறியப்பட்டது. துப்பாக்கிச் சூட்டிலிருந்து சிறுமி ஒருவரை காப்பாற்றுவது போன்று வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருந்தது.நோர்வேயின் திரைப்பட இயக்குனர் ஒருவரினால் மால்டாவில் வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தமை பின்னர் கண்டறியப்பட்டது. ஆவணப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து துல்லியமாக மதிப்பீடு செய்வதில் சர்ச்சை நிலைமை நீடித்து வருகின்றது.
எனினும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச, பிராந்திய, உள்நாட்டு ரீதியலான நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கும் வகையில் இந்த ஆப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment