Wednesday, August 12, 2015

ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஈழத் தமிழ் இளைஞர் இவர் தான் !



லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் "வாண்டட்" என்னும் இசைக் குழுவில் இணைந்தார். அதனூடாக பிரித்தானியாவில் உள்ள இளையோர்கள் வட்டத்தில் , கொடி கட்டிப் பறந்தார்.
சமீப காலமாக அவர் அமெரிக்காவில் உள்ள ஹாலி வுட் ஸ்டுடியோ சென்று அங்கே பல பயிற்ச்சிகளை எடுத்து வந்த நிலையிலேயே முதன் முறையாக ஒரு படத்தில்
நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது ஒரு வரலாறு ஆகும். இதுவரை பல தமிழர்கள் ஹாலி வுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இருப்பினும் ஹீரோ வேடம் தரித்தது இல்லை என்றே சொல்லலாம்.
source:athirvu

No comments:

Post a Comment