Thursday, August 13, 2015

தமிழீழ பொலிஸ் அணி பாதுகாப்போடு சுவிஸ் நாட்டில் நடந்த மாபெரும் விளையாட்டு போட்டி !

சுவிஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த விளையாட்டுப் போட்டி ,உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விபரங்கள் இதோ,
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2015 ஓகஸ்ட் மாதம் 08ம், 9ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள Sportanlage Deuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்ககில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்தி வருகின்றது. நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான அணிகள் வருகைதந்திருந்தன.






source:athirvu

No comments:

Post a Comment