Friday, October 08, 2010

ஜேர்மனியில் ஈழத்தமிழர் அவை உருவாக்கம் - நோர்வே ஈழத்தமிழர் அவை வாழ்த்து

வியாழன், 7 அக்டோபர், 2010 ஒவ்வொரு நாட்டிலும் அறவழியிலும் அரசியல் வழியிலும் எமது மக்களை ஒருங்கிணைக்கும் பாரிய வரலாற்றுக் கடமை நம் முன் நிற்கிறது. அதனை நிறைவேற்றும் முயற்சியின் அங்கம்தான் தேசிய அளவில் கட்டியெழுப்பப்படும் ஈழத்தமிழர் அவைகள் என்பதை அனைவருக்கும் எடுத்துரைத்து, அரவணைத்து, மாபெரும் மக்கள் சக்தியாக மாற்றவேண்டியது எமது கைகளிலே உள்ளது.


ஈழத்தமிழர் அவைகள்; எமது இலக்கான தமிழீழத் தாயகக் கனவை நினைவாக்கி, தமிழர்களுக்கென்று சுதந்திரமும் இறையாண்மையும் மிக்கதொரு நிலப்பரப்பினை உருவாக்கி, எம் இனம் செழிப்போடு வாழ வழி சமைக்கப்பாடுபடுகிறது என்பதை எம் மக்கள் தெளிவாக உணரவேண்டும். அதற்கேற்றவாறு எமது வேலைகளை துல்லியதாகவும் உறுதியாகவும் வரையறுத்து செயல்படவேண்டும்.

மேலும், ஈழத்தமிழர் அவைகள் தனித்தமிழீழ இலக்கினைத் தவிர்த்த எதனையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால், அதனை யார் தடுக்க முனைந்தாலும் எதிர்க்கும் சக்தியாக மாறும், மற்றபடி, ஈழத்தமிழர் அவைகள் உருவாக்கப்படுவது எவ்வித கட்டமைப்புகளுக்கும் எதிரானது இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது நமது கடமை.

No comments:

Post a Comment