இலங்கையின் வடக்கே வன்னிப்பிராந்தியத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஏதோ ஒரு வகையில் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தொடர்ந்தும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வடக்கே வன்னிப்பிராந்தியத்தில் போர் முடிவுக்கு வந்துள்ளபோதும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற போல அல்லாமல் நிவாரணக்கிராமங்களில் இருந்து அழைத்துவந்து எங்களை அடர்ந்த காடுகளுக்குள் விசப்பாம்புகளுக்கும், யானைகளுக்கும் இரையாக்குவதற்காகவே மீள்குடியேற்றியுள்ளதாக அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மாந்தை மேற்குப்பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார்,ஈச்சலவக்கை,பெரியமடு கிராமத்தைச்சேர்ந்த மக்களே அடர்ந்த காட்டுப்பகுதியினுள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் பெரியமடு பகுதியில் முஸ்ஸிம்கள் மீள்குடியேறியுள்ளமையினால் அரசு அப்பகுதியில் சற்று கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் பிரச்சனைகள் குறைவடைந்துள்ளது.ஆனால் சன்னார்,ஈச்சலவக்கை ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களே தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராம மக்களை அரச அமைப்புக்கள் எதுவும் இதுவரை சென்று பார்க்கவில்லை என்ற மனக் கசப்பு அம்மக்களிடம் உள்ளது. தண்னார்வ தொண்டு அமைப்புக்கள் சில அம்மக்களுக்கு உதவிகளை செய்த வருகின்றது.
எனினும் அக்கிராமங்களைச்சேர்ந்த மக்களின் அடிப்படைத்தேவைகளான குடிநீர்,மலசல கூட வசதிகள் என்பன தற்போதைக்கு அவசியமாக தேவைப்படுவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே அரசாங்கம் எங்கள் மீதும் சற்று கவனம் செலுத்தி எங்களுடைய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என அக்கிராம மக்கள்; தெரிவித்தனர்……..
-மன்னார் நிருபர்-
No comments:
Post a Comment