Thursday, January 27, 2011

சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்

சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞம் கோரியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துள்ளமை உறுதியாகியுள்ள நிலையல் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் தற்போது சுமார் 2 ஆயிரத்து 200 இலங்கை தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரி தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கை தமிழர்கள் தனித்தனியாக மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment