Thursday, January 06, 2011

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர் மீது விசாரணை - ஸ்ரீலங்கா காடியன்


[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 09:18.21 AM GMT +05:30 ]
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற தமிழ் மக்கள், இலங்கையின் புலனாய்வு துறையினரால் அதிக நேரம் விசாரணைக்கும் சோதனைக்கும் உட்படுத்தபடுவதாக ஸ்ரீலங்கா காடியன் தெரிவித்துள்ளது

புதிதாக வெளியான தகவல்களின் படி உள்வரும் மற்றும் வெளிசெல்லும் தமிழர்களை இலக்கு வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலும் பயணசீட்டை பார்வையிட்டு அதன் அடிப்படையில் சில தமிழர்களை புலனய்வுத்துறையினர் கைது செய்வது விமான நிலையத்தில் வைத்து பல மணித்தியாலங்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிலர் அடையாளம் தெரியாத வெள்ளை வான்களை ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் குறித்த தகவல்கள் பின்னர் வெளிவருவதில்லை.
இதேவேளை பயணம் அனுப்ப வருபவர்களையும் அவர்கள் அதிக அளவில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ் தேசியத்துடனோ அல்லது விடுதலைப் புலிகளுடனோ தொடர்புடையவர்கள் என கருதப்படுபவர்கள், விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் வைத்து கைது செய்யப்படுகி;ன்றனர் என ஸ்ரீலங்கா காடியன் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment