Thursday, January 06, 2011

பாப்பரசரின் கிறிஸ்மஸ் தின செய்தி இலங்கையின் நடப்பு அரசியலை சுட்டுகின்றது


[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 09:50.48 AM GMT +05:30 ]
கிறிஸ்மஸ் தினத்தன்று பாப்பரசர் 16 வது பெனடிக் வெளியிட்ட கருத்து, இலங்கையின் நடப்பு பிரச்சினையை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளதென, த ஆசியா நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சமய சுதந்திரமும், சமாதானத்துக்கான வழியும் என்ற தொனிப்பொருளில், பாப்பரசர் இந்த முறை கிறிஸ்மஸ் செய்தியை வெளியிட்டிருந்தார். 
இலங்கை அரசியலை பார்க்கும் போது. சமய வேறுபாடு நேரடியாக தாக்கம் செலுத்தாத போதும், அது மறைமுக அழுத்தத்தை பின்பற்றுகிறது. ஒரு சிறுபான்மை சமயத்தை அல்லது இனத்தை சேர்ந்தவர் இலங்கையின் தலைவராக முடியாத நிலை காணப்படுகிறது.
இலங்கையின் தலைவராவதற்கு அரசியல் சட்டத்தின் படி அவர் பெரும்பான்மை இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
எனவே இலங்கையில் காணப்படுகின்ற மத சுதந்திர இன்மையே அரசியல் பிரச்சினைக்கு ஏதுவானதாக இருக்கின்றது என த ஆசியா நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனவே பாப்பரசரின் இந்த செய்தி, இலங்கை அரசியலை விளக்கும் வகையில் இருப்பதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment