Wednesday, June 22, 2011

போர்க் குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளாத அமெரிக்கா!


இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றது என ஓல் ஹெட் லைன்ஸ் நியூஸ் என்கிற அமெரிக்க பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது.


வார்த்தைகளால் கடிந்து கொள்கின்றதே தவிர இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று சுட்டிக் காட்டி உள்ளது. இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்கிற குற்றச்சாட்டை நிரூபிக்கின்ற வகையில் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் என்கிற ஆவண வீடியோவை வெளியிட்டு உள்ளது.

இவ்வீடியோ கடந்த வாரம் நியூயோர்க்கில் புத்திஜீவிகள், இராஜதந்திரிகள் ஆகியோருக்கு காண்பிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்நாள் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினிஸ் மற்றும் முன்னாள் தூதுவர்கள் மூவர் இப்படத்தை பார்த்தனர்.

வீடியோவில் பெரிதும் அதிர்ச்சியூட்டுகின்ற காட்சிகள் இருக்கின்றன, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் இலங்கையில் மீறப்பட்டன என்று கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றோம், இச்சட்டங்கள் மீறப்பட்டு இருக்கின்ற பட்சத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், உதவி வெளியுறவு அமச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் உட்பட எமது மூத்த அதிகாரிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்து உள்ளார். ஆனால் இது வெறும் வார்த்தை ஜாலம் மாத்திரமே என பத்திரிகை குறிப்பிட்டு உள்ளது.

No comments:

Post a Comment