Wednesday, June 22, 2011

இசைப்பிரியாவின் மரணம் விசாரணை அவசியம்.நியூயோர்க் ஊடக உரிமை அமைப்பு


தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் இசைப்பிரியா, இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்கை தளமாக கொண்டு இயங்கும் ஊடக உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதற்கான உரிய ஆதாரமான காணொளியினை சனல் 4 வெளியிட்டுள்ளது என ஊடகவியலாளர் பாதுகாப்பு செயற்குழு அதிகாரி பொப் டயர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சு இசைப்பிரியா விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் அவருக்கு விடுதலைப்புலிகள் அடையாள அட்டை வழங்கியிருந்ததாகவும் கூறி அவர் விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த அடையாள அட்டை புகைப்படத்தை வளியிட்டிருந்ததோடு இசைப்பிரியாவின் கொலையை நியாயப்படுத்தவும் கொலைவெறிகொண்ட சிறிலங்கா அரசு முயன்றுள்ளமை தெரிந்ததே

No comments:

Post a Comment