ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் ஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு இலங்கை அரசு இரகசியமாகக் கேட்டிருந்தது. அதன்பின்னர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட முயற்சியின் பிரகாரம் ஜெயலலிதாவும் இந்தச் சந்திப்புக்கு இசைந்தார்.
இதனையடுத்து விசேட விமானத்தில் இந்தியாவுக்குப் பறந்த மிலிந்த மொறகொட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து சில நிமிடங்கள் கலந்துரையாடினார். எனினும் இக்கலந்துரையாடலின் விவரங்கள் வெளிவரவில்லை.
இலங்கை தமிழக அரசுக்கு இடையிலான புதிய உறவுக்கு இந்தச் சந்திப்பு வழி வகுக்கும் எனக் கருதப்படுகிறது. கடும் போர்க்குற்றங்கள் புரிந்த ஜனாதிபதி மஹிந்தவைச் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடையை இந்தியா விதிக்க வேண்டும் என ஆட்சிக்கு வந்த மறுகணமே ஜெயலலிதா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment