Thursday, June 23, 2011

பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் உயிருடன் இருந்தால் காட்டுங்கள்: தயாசிறி





விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் உயிருடன் இருந்தால் காட்டுங்கள். அதன் மூலமாக சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியும் என்று ஐ.தே.க. எம்.பியான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமன்றி செனல் 4 குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:


பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் தொடர்பில் உறுப்பினர் ஒருவர் சபையில் ஏதாவது தெரிவித்திருந்தால் அக்கூற்றை வாபஸ் பெற வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு எதிராக கை நீட்டக் கூடாது.

பிரபாகரனின் மனைவி உயிருடன் இருப்பதாகவும் அவரின் பிள்ளைகள் கல்வி பயில்வதற்கு ஜனாதிபதி உதவி செய்வதாக ஆளும் கட்சியின் எம்.பி. யான அஸ்வர் இந்த சபையில் நேற்று (நேற்று முன்தினம்) கூறினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன இறுவட்டும் இருக்கின்றது.

உறுப்பினர்கள் பொய் கூற முடியாது, பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருந்தால் காண்பிக்கவும். அதன் மூலமாக சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கும் செனல் 4 குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க முடியும். ஜே.வி. பி. யின் தலைவர் விஜயவீர படுகொலைச் செய்யப்பட்ட வேளை அவரது மனைவி, பிள்ளைகளை கடற்படையினர் பாதுகாத்தனர் என்பதையும் நாம் நினைவூட்ட விரும்புகின்றோம் என்றார்

1 comment:

  1. This is a very good comment. The civil war is about education, equal opportuniy, actualization and high standard od living.

    We have to solve the problem now by applying solutions to the problem makers.

    ReplyDelete