Sunday, July 03, 2011

சனல் 4 னை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிப்போம் – தமிழர்களே எழுக…!

சனல் 4 னை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிக்க உலக தமிழனம்திரண்டு எழுந்து சனல் 4வின் கரங்களை வலுபட்டுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் எமக்கு உள்ளது .தயவு செய்து சிங்களத்தின் சதியினை முறியடிப்போம் மக்களே உங்களை கருத்துகளை உடன் எழுதி அனுப்புங்கள் .


சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்தும் சிறிலங்காவின் பூர்வ குடி தமிழின மக்களின் விடுதலை காற்றை சுவாசிக்க முடியாதபடி தடுக்க முயல்கின்றது. அதன் முதற்க்கட்டமாக விடுதலை போரளிகளை பயங்கரவாதமாக சித்தரித்து தொடர்ந்து மக்களை அழித்து வந்தது. தற்போது உலகின் முக்கியமாக பிரித்தானியாவின் முன்னனி ஊடகமான சணல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் தொடருக்கு எதிராக பிரித்தானியாவின் ஊடங்களை கட்டுப்படுத்தும் ஒப்கொம் என்னும் நிறுவனத்தில் முறைபாடு செய்துள்ளது. தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க்கபோவதாகவும், அதில் தான் வெற்றி பெறமுடியாது என்று தெரிந்திருந்தும் எமக்காக உலகில் எந்த ஊடகமும் குரல் கொடுக்க கூடாது என்பதற்க்காக, மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஆகவே நாங்கள் சணல்4 தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு மட்டும் நில்லாமல் தமிழர் அல்லாதோரிடம் எமது உண்மை நிலையை கொண்டு வந்த ஊடக சணல்4 என்றும் தெரியப்படுத்துங்கள். அவர்களையும் பின்னூட்டம் எழுத்தச்சொல்லுங்கள், சணல் 4 காட்டியது எமக்கு நடந்த கொடுமைகளின் ஒரு வீதமே என்றும் கூறுங்கள். இது காலத்தின் கட்டாயம், விரைந்து செயற்ப்படுங்கள்.

No comments:

Post a Comment