Saturday, July 30, 2011

ஈழத் தமிழரை ஒழித்துக்கட்டியதில் தொடர்புடைய டி.கே.ஏ நாயர் இந்தியப் பிரதமரின் ஆலோசகராக நியமனம்!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச்செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது
டி.கே.ஏ.நாயரின் பதவி ‘மாற்றம்’ என்பது ஏற்றமா இறக்கமா என்ற மதிப்பீடுகளும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட செய்தியுடன் சேர்ந்தே வெளியாகியுள்ளது.


இதற்குக் காரணம், முதன்மைச் செயலராக இருந்த இந்த நாயரின் ‘பங்கு’ ஈழத் தமிழர் பிரச்சனையில், அதாவது அவர்களை ஒழித்துக்கட்டிய இனப் படுகொலைப் போர் தொடங்கப்பட்டதில் தொடர்புடையதாகும்.
சமீபத்தில் ‘தி ஸ்டேட்ஸ்மென்’ என்ற வட இந்திய ஆங்கில நாளிதழில், இந்திய இதழாளரான சாம் ராஜப்பா ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த‌க் கட்டுரையில், சனல் 4 வெளியிட்ட, உலகின் நெஞ்சை உலுக்கிய‘இலங்கையின் கொலைக் களங்கள்’ என்கிற ஆவணப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு மட்டும் இல்லாதிருந்திருக்குமானால், இப்படிப்பட்ட நெஞ்சை உலுக்கும் காட்சி ஆவணம் ஒன்று வருவதற்கு வாய்ப்பேயில்லாமல் போயிருக்கும் என்று எழுதியிருந்தார்.

இந்திய மத்திய ஆட்சியை அதிரச் செய்த சாம் ராஜப்பாவின் அந்த‌க் கட்டுரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு அமைதி முயற்சி தொடர்பான முழு விவரமும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் சாராம்சம் இதுதான்.
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான அந்த ஆவணப் படத்தில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்திற்கு புது டெல்லியே காரணியாக இருந்த, இதுவரை சொல்லப்படாத கதை ஒன்று உள்ளது.

2005ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ர‌ணில் விக்கிரமசிங்கதான் வெற்றி பெறவேண்டும் என்று இந்தியா விரும்பியது.
ஏனென்றால், அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா ராவ், ர‌ணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்தத் தேர்தலில் தமிழருக்கு எதிரான வல்லூறாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று த‌மிழ‌ர்க‌ள் தேர்தலை‌ப் புறக்கணித்தனர். அவர்கள் மட்டும் வாக்களித்திருந்தால், ர‌ணில்தான் மிகப்பெரிய வெற்றி பெற்று அதிபராகியிருப்பார்.
இலங்கையின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகத் திகழவேண்டுமெனில்,தமிழருக்கு எதிரான வல்லூறு என்ற தனது உருவகத்தை மாற்றிக் கொள்ள முற்பட்டார் ராஜபக்ச, டெல்லியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் டெல்லி தொடர்ந்து அவரை புறக்கணித்தது.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் ஆதரவைப் பெற்று இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இங்குவாழும் சமூக ஆர்வலர்களின் உதவியை நாட ராஜபக்ச முற்பட்டார்.
டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே பாலமாக செயல்பட தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை உருவாக்க ராஜபகசவின் தூதர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். கொழும்புவின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணியாளரும், ஜெயப்பிரகா‌‌ஷ் நாராயணன், அன்னைத் தெரசா ஆகியோருடன் நெருக்கமாக பழகியவருமான எம்.ஜி.தேவசகாயத்தை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட ஒரு குழு உருவானது.
இதில் மற்றொரு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், தமிழக உள்துறை செயலராக பணியாற்றிவருமான எஸ்.பி.ஆம்ப்ரோஸ், இலங்கை பிரச்சனையில் விவரமறிந்தவராகத் திகழந்த முன்னாள் இராணுவ அதிகாரி (கர்னல் ஹரிஹரன்), மூத்த இதழாளர் (ராம் ராஜப்பாதான்) ஆகியோர் கொண்ட அந்தக் குழு, 2007ம் ஆண்டு மேமாதம் 10ஆம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்குழு, அதிபர் ராஜபக்சவின் ஆலோசகர் சுனிமால் பெர்ணான்டோ தலைமையிலான குழுவுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியது.
இலங்கைத் தமிழர் இனப் பிரச்சனைக்கு, அவர்களின் நீண்ட கால அரசியல் எதிர்பார்ப்பிற்குத் தீர்வு தராத எந்த ஒரு தரப்பின் இராணுவ வெற்றியும் நீடித்தத் தீர்வை உருவாக்க முடியாது என்பது இந்த சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்தேதியன்று கொழும்புவில் இந்தக் குழு, அதிபர் ராஜபக்ச, அவருடைய செயலர் லலித் வீரதுங்கா, துணைச் செயலர் வருண சிறீதனபாலா,ஆலோசகர் சுனிமால் பெர்னா‌ண்டோ ஆகியோரைச் சந்தித்து பேசியது.
இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இந்திய அரசு என்ன கருதுகிறது என்பது பற்றியும், தனது அரசின் நடவடிக்கைகள் மீதான பன்னாட்டு விமர்சனங்களுமே தனக்குக் கவலைத் தருவதாக ராஜபக்ச கூறினார்.
தமிழர் இனப் பிரச்சனைக்கு இலங்கைக்குள்ளிருந்துதான் தீர்வு உருவாக்கப்படவேண்டும் என்றும், அதனை இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுக் கருத்துகளைக்கொண்டு முறைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவசகாயம் கூறிய கருத்தை ராஜபக்ச வெகுவாக ஆமோதித்தார்.
தமிழகக் குழுவுடன் நடத்திய இரண்டு சந்திப்பிற்குப் பிறகு, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்: “வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் நியாயமான குறைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தக் கதையை ரொம்பவும் நீட்டிக்காமல் குறைத்துக் கூறுகிறேன். அதன்பிறகு தமிழகக் குழுவுடன் ராஜபக்ச அரசில் அமைச்சர்களாக இருந்துவர்களும், அதிகாரிகளும், சென்னையிலும் கொழும்பிலும் கூடி, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து பல முறை விவாதித்தனர்.
இந்தச் சந்திப்புகளில் இலங்கையின் அரசமைப்பு விவகாரங்கள் மற்றும் தேச ஒற்றுமை அமைச்சர் டிஈடபுள்யூ குணசேகரா, அரசு மொழி ஆணையத்தின் தலைவர் ராஜாகல்லூரே ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி தமிழகக் குழு மீண்டும் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியது. தீர்வுக்காண திட்டம் வகுக்கப்பட்டது.
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை அரசும், தமிழகக் குழுவும் பேசி வருவதை கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகம் எப்படியோ மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து விட்டது. தேவசகாயத்தை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஏ.மாணிக்கம் கேட்டார்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவுமில்லை, சந்திக்கவுமில்லை. ஆனால், “அங்கீகாரம் இல்லாத பேர்வழிகளுடன் எதற்காக பேசுகின்றனர் என்று இலங்கை அதிபர் குழுவை இந்தியத் தூதரகம் ‘அதட்டியதாக’ செய்திகள் வந்தது.
இலங்கை இந்தியத் தூதரகத்திடமிருந்து சென்ற செய்தியை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் (மணி சங்கர் ஐயர்) சோனியாவின் காதில் போடுகிறார்.

அதுமட்டுமன்றி, தமிழர் பிரச்சனைக்கு பஞ்சாயத்து ராஜ் மூலம் தீ்ர்வு காணும் திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் (கிராமத்திற்கு அதிகாரம் அளிப்போம் என்று ராஜபக்ச பேசியதன் பின்னணி புரிகிறதா?) மணி கூறுகிறார்.
இதையெல்லாம் சற்றும் அறியாத தேவசகாயம், தன்னோடு ஒரு காலத்தில் பணியாற்றியவரும், அப்போது (இப்போதும்தான்) பிரதமரின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ.நாயருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
2008ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக எழுதியனுப்பிய அறிக்கையில், இலங்கை இனச் சிக்கலிற்கு இராணுவத் தீர்வு என்று ஏதுமில்லை.



  முகப்பு
Share

No comments:

Post a Comment