Friday, August 05, 2011

சனல் 4 ஆவணப்படம் குறித்து தூதுவர்களுக்கு பீரிஸ் விளக்கம்!


இலங்கை தொடர்பான சனல் 4 ஆவணப்படம் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று விளக்கமளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை, சனல் 4 ஆவணப்படம், சட்டவிரோத குடியேற்றம், தமிழ் அரசியல் கட்சிகளுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை,  தற்போதைய அரசியல் பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள்,  முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள், நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தல் மற்றும் சமாதான மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் விரிவாக விளக்கமளித்துள்ளார்.



பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் ஆகியோரும் இந்த விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச ரீதியில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment