Friday, August 05, 2011

புலிகளின் கோரிக்கையையே கூட்டமைப்பு முன்வைக்கின்றது: அரசாங்கம் குற்றச்சாட்டு


அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப் புலிகள் முன்வைத்த கோரிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது முன்வைக்கின்றது என அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான நேற்றைய பேச்சுக்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்காக இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை தொடர்பாகக் கருத்து வெளியிட்டபோதே பேச்சுவார்த்தைகளிள் அரசின் சார்பில் கலந்துகொண்ட சஜின் வாஸ்குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ள விடயங்களில், அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பிலான பயணத்தில், பாதிப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்ட அவர், பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது திடீரென இவ்வாறு காலக்கெடுவை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment