இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வாகும். அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதானது எதிர்காலத்தில் இலங்கையில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் என்று கொழும்பிலள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை அவசரகாலச்சட்டத்தை இலங்கை அரசு நீக்கியுள்ளது குறித்து இந்தியாவும் வரவேற்றுள்ளது. அத்துடன் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பான குறுகிய நேர விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இன்று பதிலளித்துப் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசின் முடிவை இந்தியா வரவேற்பதாக கூறியுள்ள அவர், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment