Thursday, August 04, 2011

சாமி அக்னிவேஷ் (மனிதநேயக் காவலர், புதுடில்லி) – போராடுவோம் வெற்றிபெறுவோம்

பெங்களூர் கருநாடக தமிழ் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ” ஐ. நா. ஆய்வுக் குழுவால் அடையாளம் காட்டப்பட்ட போர் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலைத் தண்டிக்க வலியுறுத்தி மாநாட்டிற்கு” சாமி அக்னிவேஷ், மனிதநேயக் காவலர், புதுடில்லி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

மாநாட்டு ஊர்வலத்தை கருநாடக தமிழ் மக்கள் இயக்கம் தலைவர் தோழர் சி. ராசன் தொடங்கி வைக்க, ஊர்வலம் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்டது. இறுதியாக மாநாட்டு இடத்திற்கு சென்றடைந்தது.
மாநாட்டு அரங்கில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது. பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு,  சாமி அக்னிவேஷ் , ஈழ தமிழர்களுக்கு மிகவும் ஆதரவான கருத்துக்களை பதிவு செய்தார்.
மாநாட்டு நிகழ்ச்சி, மாநாட்டு ஊர்வலம்,  மொழிவாழ்த்து, வரவேற்ப்புரை, தலைமையுரை, சிறப்புரை என அமைந்தது.
மாநாட்டு சிறப்புரையில், சாமி அக்னிவேஷ் பேசுகையில், சேனல்-4  ஒளிபரப்பிய  53 நிமிடங்கள் உள்ள ” இலங்கையின் கொலைக்கலன்” மிகவும் பாதித்தது. நெஞ்சம் அழுதது. தொடர்ந்து பார்க்க முடியவில்லை. இவ்வளவு பெரிய போர்க்குற்றம், மனித பேரவலம் நம் கண் முன்னே நடந்து முடிந்துள்ளதே.   ஐ. நா. ஆய்வுக் குழுவால் அடையாளம் காட்டப்பட்ட போற்குற்றத்தை உடனே அனைத்துல விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இதற்கு அனைத்து மொழி, இன மக்கள், மனித உரிமை அடிப்படையில் ஆதரவு தரவேண்டும் என்றும், போர்குற்ற விசாரணை முடிந்து, தமிழ்மக்கள் விருப்பத்திற்கிணங்க, தமிழ் ஈழம் தான் ஒரே முடிவு என்றால் பின் வரும் நிகழ்வுகள் முடிவு செய்யட்டும். அகிம்சை வழியில் போராட, அணைத்து தரப்பு மக்களையும் இணைத்து போராட அழைப்பு விடுக்கிறார்.
இலங்கை மீது பொருளாதார தடைக்கு ஆதரவும், தமிழக சட்டசபையின் தீர்மானங்களுக்கும் ஆதரவு தருகிறார். “போராடுவோம் வெற்றிபெறுவோம்” என தமிழில் கூறி போராட்ட அறைகூவல் விடுத்தார்.

No comments:

Post a Comment