சென்னைத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்காவை கைவிட்ட மத்திய அரசு
சென்னையில் சிங்கள
சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின்
பின்னணியில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது என்று இந்தியா
கூறியுள்ளது. இதுதொடர்பாக புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சின்
ஊடகப் பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம்
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவிதமாக அரசியல் பின்னணியும் கிடையாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை
சிறிலங்கா அரசு தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளுடன்
இந்த விவகாரத்தை தொடர்புபடுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment