இலங்கையில் கடந்த 30
வருடங்களில் 12000 பேருக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலமையில்,
இலங்கையில் சட்ட விரோதமாக காணாமல் போனோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள்
சாசனத்தில் கைச்சாத்திட வேண்டுமென ஐ.நா சபையின் நடவடிக்கைக்குழு இலங்கைக்கு
வலியுறுத்தியுள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. எனினும் இலங்கை அரசு அதில் கலந்துகொள்ள மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல தடவைகள் ஐ.நா நடவடிக்கை குழு இலங்கை வருவதற்கு அனுமதி கோரியிருந்த போதும் அவர்களை இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.
அத்தோடு இலங்கையில் சட்டவிரோதமாக காணாமற்போவோரைக் கட்டுப்படுத்துமாறும் இலங்கைக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாக ஐ.நா நடவடிக்கைக் குழு உறுப்பினர் மார்டிஸ் ஜோசு பொல்லாடோ தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 12230 முறைப்பாடுகள் ஐக்கிய நாடுகளின் காணாமற் போனோர் நடவடிக்கைக் குழுவிடம் உள்ளதாகவும் அதில் 40 முறைப்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும், 6535 முறைப்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணை மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. எனினும் 5653 முறைப்பாடுகளில் எந்தவித தகவலும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment