அமெரிக்காவின்
முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க
வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும்
14ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ரொபர்ட் ஓ பிளேக் பல்கலைக்கழக
மாணவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போரில்
தோற்கடிக்கப்பட்ட தமிழ் இனவாதத்தை அரசியல் ரீதியாக வென்றெடுக்க உதவி
வழங்கும் வகையில் பிளேக் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம்
திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு ஒன்றை வழங்க
அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment