Tuesday, January 10, 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சிறந்த போராட்ட இயக்கங்களில் ஒன்று: பார்த்தசாரதி


இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவின் அரசியல் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டுமென முன்னாள் உயர்ஸ்தானிகர் ஜீ.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் தமிழர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கைத்தொழில் மற்றும் பொறியியல் நிறுவனங்களை வடக்கு கிழக்கில் நிறுவுவதன் மூலம் பாரியளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சிறந்த போராட்ட இயக்கங்களில் ஒன்று எனவும் அதன் தலைவரின் சொல்லுக்கு கூடுதல் மதிப்பு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மரபு ரீதியான இராணுவமொன்றுடன் மரபு ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டதே தமிழீழ விடுதலைப்புலிகள் இழைத்த மாபெரும் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment