Tuesday, January 10, 2012

ராமேஸ்வரத்தில் மஹிந்தவின் சகோதரியின் கணவர் மீது தாக்குதல்?


ஜனாதிபதி மஹிந்தராஜபக்கவின் சகோதரியின் கணவர் எனச் சொல்லப்படுகின்ற நபர் மீது இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடேசன் குமரன் என்பவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். இன்று அவருடைய வருகையை தெரிந்துகொண்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க உட்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதுடன்.

இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.

நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment