Tuesday, January 10, 2012

இந்தியாவைப் பிரிப்பதில் சர்வதேசம் ஈடுபடுகிறதா...? எஸ்.பி.திசநாயக்க என்ன சொல்கிறார்..? ஈழதேசம் செய்தி...!

வடபகுதி மக்களின் உரிமைகளுக்காக போராடினார்கள் விடுதலை புலிகள், நாட்டைப் பிரிப்பதற்கு யுத்தத்தில் ஈடுபடவில்லை, சுதந்திரத்திற்குப் பின் வடக்கில் அபிவிருத்தி இல்லை, எனவே அதன் காரணமாகவே வடக்கு இளைஞர்கள் யுத்தத்துக்கு தள்ளப்பட்டனர். வடக்கு மக்கள் நாட்டைப் பிரிக்க யுத்தத்தில் ஈடுபடவில்லை எனவே, புலிகளின்  மீது தவறில்லை என்கிறார் உயர்கல்வி
அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க. 

இன்று எமது நாட்டில் யுத்தம் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டில் அன்றைய யுத்த நிலைக்கு காரணம் சிலர் அல்ல. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட இந்த தவறுகளை செய்தவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றும் இழப்புகளுக்கு எல்லாம் இவர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் அரசியலை நினைவு கூர்ந்து இவ்வாறு கூறுகிறார், அதாவது பழைய சம்பவங்களை மறந்துவிட வேண்டுவோம். நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தென்னாப்பிரிக்காவை கட்டி எழுப்புவோம் என தென்  ஆப்பிரிக்கா விடுதலை பெற்றபோது வெள்ளை இனத்தவருக்கு அவர் அழைப்பு விடுத்தார். நெல்சன் மண்டேலா ஜனாதிபதி பதவிக்கு வரும்வரை தென்னாப்பிரிக்காவில் கருப்பு இன மக்கள் வாக்குரிமை அற்றவர்களாகவே வாழ்ந்தார்கள்.

20 சதவீதமாக அங்கு வாழ்ந்த வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள். கருப்பு இனத்தவர்கள் வாக்குரிமை பெற்று நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட வேளை, வெள்ளையர்கள் நாட்டைவிட்டு வெளியேற தயாரானபோது, நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தென் ஆப்பிரிக்காவை கட்டி எழுப்புவோம் என அழைப்பு விடுத்து அவர்களின் முடிவை மாற்றியமைத்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை இப்போது சிறுபான்மை, பெரும்பான்மை என யாரும் கிடையாது. நாம் எல்லோரும் ஒன்று தான் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களிடையே பிரிவு வேண்டாம்.

அன்று வடக்கு மக்கள் தமது உரிமைக்காகப் போராடினார்கள், அதாவது விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. 1948 சுதந்திரத்திற்கு பின்னர் வடக்கில் அபிவிருத்தி நடைபெறவில்லை. அதன் காரணமாகவே வடக்கு இளைஞர்கள் யுத்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள். வடக்கு மக்கள் நாட்டைப் பிரிப்பதற்காக யுத்தத்தில் ஈடுபடவில்லை. மேற்குலக நாடுகள் இலங்கையை இலங்கையை பிரிக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர். அப்படி பிரிக்க வேண்டும் என்பதில் சந்தோசம் காண்கிறார்கள். அவர்களுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கையைப் பிரிக்க முற்படுகிறார்கள். எமது நாட்டை ஒரு போதும் பிரிக்க முடியாது அதற்கு இந்தியாவும் துணை போகாது. இந்த நாட்டில் இன ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக எந்த பல்கலைக் கழகமும் இயங்க முடியாது என்று கூறியுள்ளார்.

அதாவது இவ்வாறெல்லாம் வரலாறுகளையும் உண்மைகளையும் மாற்றி தங்களுக்கு சாதகமாக பேசிவிட்டால் எல்லாம் சரியாகிப் போகும் என்கிறார்கள். மேலும் தமிழர்கள் தற்போதைய நிலையிலேயே வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது கல்வியில், அரசு வேலை வாய்ப்பில், குடியுரிமை பெறுதல் ஏதுவும் இன்றி இலங்கையில் இருந்து கொள்ளுங்கள் என்கிறார், தென் ஆப்பிரிக்காவின் உண்மைகளை மறைத்து வெள்ளையர்களை பெரிய மனதுடன் நாட்டில் வாழ அனுமதி அளித்தார் நெல்சன் மண்டேலா என்கிறார். வெள்ளையர்களுக்கு குடியுரிமை இல்லை என்றால் தென் ஆப்பிர்க்காவே இருந்திருக்காது என்ற உண்மையை  மறைத்து, தமிழர்களும் அதுபோல இலங்கையில் சும்மா இருந்து கொள்ளுங்கள் என்கிறார்,

இந்தியாவை பிரித்துப் போட சர்வதேச நாடுகள் முயற்சிக்கின்றன என்ற உண்மையை மட்டும்  பேசுகிறார். அதாவது தனி ஈழம் அமைய மேற்குலக நாடுகள் முயற்சி செய்தால், இந்தியாவையும் அதாவது காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலத்தையும் அதுபோன்றே அருணாச்சல மாநிலத்தையும் தனியாக பிரித்து விடுவார்கள் என்கிறார், எனவே இதற்குப் பயந்தாவது இந்திய அரசு தனி ஈழ கோரிக்கையை அதாவது தனி ஈழ நாட்டை அமைய விடக் கூடாது என்கிறார். இவர்கள் நினைப்பதெல்லாம்  நடைபெற்று விடும் என்கிறார்கள். ஆனால் மனித குல வரலாறோ இவர்கள் நினைக்கும் திசையில் என்றைக்குமே  பயணிப்பதில்லை என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

சங்கிலிக்கருப்பு

No comments:

Post a Comment