Tuesday, January 10, 2012

விடுதலைப் புலிகளின் இலட்சினைகள் கொண்ட மேலும் பத்தாயிரம் முத்திரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம்  மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் ‘லா போஸ்ட்’ வெளியிட்டுள்ளது. பிரபாகரனின் உருவம் மற்றும் புலிகளின் இலட்சினைகள் கொண்ட 11  வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.
முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விரும்பிய பெறுமதியில்  விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது. (எமது பிரான்ஸ் செய்தியாளர் ரோஹான் ரம்புக்வெல்ல)

No comments:

Post a Comment