யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இன்று உயர்கல்வி அமைச்சர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவிருந்த நிலையிலேயே இக் கெடுபிடி நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக ஆரம்ப நேரத்தில் இருந்து உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழகத்திற்குள் வரும் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நின்று ஒவ்வொரு மாணவர்களாக சோதனைக்குட்படுத்தினர்.
மாணவர்களது பொக்கட் உட்பட மோட்டார் சைக்கிள் வரை சோதனையிடப்பட்டது. சோதனையின் பின்னரே அவர்களை உட்செல்லவும் அவர்கள் அனுமதித்தனர்.
இதுமட்டுமல்ல கைலாசபதி கலையங்கில் உயர்கல்வி அமைச்சுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் உட் செல்வதற்கிருந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழ் மாணவர்கள் அழுத்தங்களுடனேயே தமது கல்வியை தொடர்கின்றனர் என்பதற்கு இது ஒர் உதாரணமாகும்.
பல்கலைக்கழகம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் நிரப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment