முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியும், ஜனநாயக விடுதலைப் போராளியுமான நெல்சன் மண்டேலாவைத் தலைவராகக் கொண்ட இந்த "த எல்டர்ஸ்" அமைப்பில்,
முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அட்ஸாரி,
முன்னாள் ஐ.நா. செயலர் கொபி அனான்,
பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் புரட்சி செய்த பெண்மணியான எலா பட்,
அல்ஜீரியாவின் சுதந்திரப் போராளி எனக் கூறப்படும் லக்தர் ப்ராஹ்மி,
நோர்வேயின் முதல் பெண் பிரதமர் க்ரோ ப்ரண்ட்லண்ட்,
முன்னாள் பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ எச்.கார்டாஸோ,
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்,
மொசாம்பிக் சுதந்திரப் போராளியென வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிபதி திருமதி கிரேஸா மச்சல்,
அயர்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் முன்னாள் ஆணையாளருமான மேரி ரொபின்சன்,
தென்னாபிரிக்காவின் கிறிஸ்தவ பேராயர் டெஸ்மன்ட் டுட்டூ
ஆகியோர் இதர உறுப்பினர்களாவர்.
இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தான நீதி விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அவசியமென்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளுக்கு இதற்கான பொறுப்பு உள்ளதென்றும் "த எல்டர்ஸ்" அமைப்பு மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஜெனிவா மாநாடு நெருங்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கும் இராஜதந்திர முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.
தற்சமயம் "த எல்டர்ஸ்" அமைப்பு மேற்கொண்டிருக்கும் இந்தச் செயற்பாடு இலங்கைக்குப் பெரும் பின்னடைவைக் கொடுக்கக்கூடுமென்று இராஜதந்திரத் தகவல்கள் மேலும் குறிப்பிட்டன.
No comments:
Post a Comment