தமிழகத்திலும்
'ஐரோப்பிய பாராளுமன்றம் தொடக்கம் ஐநா வரைக்குமான நடைபயணத்தை' முன் னிட்டு
கையெழுத்துவேட்டை. தொலைக்காட்சிகள் மற்றும் சஞ்சிகைகளிலும் முதன்மைச்
செய்திகள்.
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஐரோப்பிய பாரளுமன்றம் தொடக்கம் ஐக்கியநாடுகள் சபை வரை நீதிக்கான நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமை மன்றத்திற்கு தமிழர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்ட தபால் தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டு வருகிறது. இச் செயற்பாட்டை தமிழகத்திலும் கட்சிகள், தலைவர்கள் என பலரும் எவ்வித பேதமுமின்றி முன்னெடுத்து வருவதாக எமது தமிழகச் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்துத் தெருவித்தார்.
www.walk-for-justice.org
தழிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் எனும் சஞ்சிகை காத்திரமான விடையங்களை உள்ளடக்கி செய்தி வெளியிட்டது. குறிப்பாக தமிழீத்தில் இராசெபக்ச குடும்பத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை சார்ந்து பன்னாட்டு விசாரணை அவசியம், தமிழீழம் குறித்து பன்னாட்டு மேற்பார்வையில் வாக்கெடுக்கப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களிலிருந்து அடக்குமுறை இராணுவம் திருப்பியழைக்கபட வேண்டும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள போராளிகள் விடுவிக்கப்படவேண்டும் போன்ற நடைபயணத்தை மேற்கொள்வோரின் கோரிக்கைக்கு இருக்கம் ஆதரவு சார்ந்தும் காத்திரமாண கருத்துக்களை முன்வைத்துள்ளது.
தமிழ்த் தேசப்பொதுவுடமைக் கட்சியினர் கடந்த 12.02 பெப்பிரவரி மாதம் நடாத்திய 6 வது பொதுக்குழுவின் முதன்மைக் கூட்டத்தில் இனப்படுகொலை புரிந்த சிறீலங்கா பேரினவாத அரசை விசாரிக்கக் கோரி மேற்கொள்ளப்படும் கயைழுத்துவேட்டைக்கென பிரத்தியேக கையெழுத்து இயக்கம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மாணமும் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்வொன்றும் நீதிக்கான நடைபயணம் சார்ந்து ஒளிபரப்பாகியது.தமிழீழ அரசியல் வீச்சு என்பது உலகத்தமிழர்கள் மத்தியில் மெல்ல மெல்ல படர்வடைந்து புதிய சர்வதேசப் பரிமாணம் ஒன்றுக்குள் காலெடுத்து வைப்பதை இச் செயற்பாடுகள் கட்டியம்கூறி நிற்கிறது.
இவ் வரலாற்றுச் சூழமைவில் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 5 ஆம் நால் ஐக்கியநாடுகள் சபையின் முன் நாடத்தப்படவுள்ள கண்டனப் போதுக்கூட்டத்தில் திரட்சிகொள்வது அவசியமாகிறது.
No comments:
Post a Comment