Sunday, February 26, 2012

அரசபடையினருக்கு ஆதரவாக சாட்சிசொல்ல ச.கனகரத்தினமும் ஜெனீவா சென்றுள்ளார்.

இறுதிக்கட்டபோரின்போது சிறீலங்காப்படையினர் மனிதஉரிமைமீறல்களில் ஈடுபடவில்லை என்ற நேரடிசாட்டியினை தெரிவிக்க ச.கனகரத்தினம் ஜெனீவாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள்தமிழ்தேசியக்கூட்டமைப்பில் முல்லைமாவட்ட நாடாளமன்ற
உறுப்பினராக இருந்த இவர் சிறீலங்காவின் சுதந்திரக்கட்சியில் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மகிந்தறாஜபக்சவின் இணைப்பாளராக கடமைஆற்றும் இவர் இறுதிப்போரின் போது சிறீலங்காப்படையினரின் பல்வகையான தாக்குதல்களுக்கு முகம்கொடுத்துவிட்டு பின்னர் வதைமுகாம்,கொழும்பின் நான்காம் மாடி போன்ற வதைமுகாம்களில் விசாரணைக்காக வைக்கப்பட்ட பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்துசெயற்படுகின்றார்.
இவ்வாறான நிலையில் இறுதிமுள்ளிவாய்கால் தாக்குதல்களில் சிறீலங்காப்படையினர் மனிதஉரிமைமீறல் சம்பவங்களில் ஈடுபடவில்லை என்பதையும் பன்னாட்டு சட்டங்களுக்கு அமைவாகவே போரை நடத்தினார்கள் என்பதற்குமான நேரடிசாட்சியாக ஜெனீவாவில் கருத்துதெரிவிக்கவுள்ளார் இவரை ஜெனீவாவிற்கு சிறீலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளதுமற்றும்ஒட்டுக்குழு அமைச்சரான டக்ளஸ்தேவானந்தா, றிச்சாட்பதியுதீன்,ரவூப்ஹக்கீம்,ஹிஸ்புல்லா ஆகிய அமைச்சார்கள் ஜெனீவா சென்றுள்ளார்கள் குறிப்பிட்ட தமிழ்அமைச்சர்களும் சிறீலங்காவின் சாட்சியங்களாக ஜெனீவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment