ஐ.நா
மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் நிலை குறித்த
பேரவையின் ஆண்டு அறிக்கையை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மனித உரிமைகள் அறிக்கையில், இலங்கை குறித்த விடயங்களம் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு,
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ இன்று
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
நேற்றுக்காலை 10.30 மணியளவில் மரியா ஒரேரோ உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இறுதிநேரத்தில் அவரது உரை கைவிடப்பட்டது. இன்று காலை 10.20 மணியளவில் அவரது உரை இடம்பெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் குறித்தே மரியா ஒரேரோ முக்கியமாக உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது உரை பிற்போடப்பட்டதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் நேற்று பிற்பகல் ஜெனிவாவில் ஒழுங்கு செய்யப்பட்ட பக்கநிகழ்வு ஒன்றே காரணம் கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இலங்கை அரசுக்கு ஆதரவு தேடும் வகையில் இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில், இலங்கையின் விளக்கங்களை அவதானித்து, அதற்கேற்றவாறு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வகுக்கவே மரியா ஒரேரோவின் உரை இன்றைக்குப் பிற்போடப்பட்டதாக கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.Posted by SankathiWPadmin on March 2nd, 2012

No comments:
Post a Comment