Monday, March 19, 2012

இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது இலங்கையிலுள்ள தமிழர்களைக் காயப்படுத்தும்

sampanthanஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது இலங்கையிலுள்ள தமிழர்களைக் காயப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியா இந்தத் தீர்மானத்தை எதிர்க்கலாம் என்று தெட்டத்தெளிவாக தெரிகிறது. இதனால் இலங்கையிலுள்ள உள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சார்பாக மட்டும் நான் பேசவில்லை. இதேவெளை, இந்தியா ஒரு அயல்நாடு, அவர்கள் மிகவும் கவனமாகவே முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் ஊடாக அவர்கள் ஒரு பங்கை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் தீர்மானம் கலந்துரையாடல் நிலையில் இருந்த போது, வொசிங்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இந்தியாவை அமெரிக்கா எதிர்க்காது என்றும் தமது எந்த நகர்வும் இந்திய-அமெரிக்க உறவுகளைப் பாதிக்கும் வகையில் அமையாது என்றும் கூறியிருந்தன என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.Posted by Nilavan on March 18th, 2012

No comments:

Post a Comment