Sunday, March 18, 2012

திருவாரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் பிரணாப்முகர்ஜி உருவ பொம்மை எரிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய நான்கு இடங்களில் பிரணாப்முகர்ஜியின் உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை மனிதநேயமற்ற முறையில் கொன்றுகுவித்த சிங்கள அரசுக்கு எதிராக கடந்த 7ம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் அமெரிக்க அரசு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இந்த தீர்மானத்திலிருந்து
தப்பித்து கொள்ள இலங்கை அரசு பல்வேறு நாடுகளிடம் தனக்கான ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் உலக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 22க்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்கின்றன. இதே தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்க வேண்டுமென்று தமிடிநநாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைக்கு முன்தினம் பாராளுமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து பேசிய பொழுது, எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் எழுப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரவு தெரிவிக்காது என்று நடுவண் அமைச்சர் பிரணாப்முகர்ஜி சொன்ன செடீநுதி தமிழர்களை மேலும் படுபாதாளத்திற்கு தள்ளியுள்ளதாக கருதப்படுகிறது. தமிழர்கள் மீது அக்கறை செலுத்தாமலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சொன்ன கருத்துகளை ஏற்காமலும் தீர்மானத்தை ஆதரிக்கமாட்டோம் என்று சொன்ன பிரணாப்முகர்ஜியின் உருவ பொம்மையை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்டத்தலைவர் பி.நாகேஷ், மாநில துணை செயலாளர் துரை அருள்ராஜன், ஒன்றிய தலைவர் எஸ்.பாப்பையன், செயலாளர் என்.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு இந்திய அரசை கண்டித்தும் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தியும், பிரணாப்முகர்ஜியை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரணாப்முகர்ஜியின் உருவபொம்மையை நடு ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி கோசமிட்டனர்.

இதேபோல் திருவாரூரில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கே.ராஜா, துணைசெயலாளர் பி.முருகேஷ், எஸ்.பாஸ்கரன், மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் சு.பாலசுப்பிரமணியன், செந்தில், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் உரு பொம்மை கொளுத்தப்பட்டது. நன்னிலத்தில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையிலும், திருத்துறைப்பூண்டியில் வி.ஜவஹகர், எம்.உமேஷ்பாபு, ஆர்.ஜி.ஏங்கல்ஸ், குமார் ஆகியோர் தலைமையிலும் உருவபொம்மை கொளுத்தப்பட்டது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய இடங்களில் உருவபொம்மை கொளுத்தியவர்களை போலீசார் கைது செடீநுதனர்.

No comments:

Post a Comment