Friday, March 16, 2012

சிறிலங்காவின் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் – இராஜாங்கத் திணைக்களம் கடுப்பில்

சிறிலங்காவில் அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெற்று வரும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக ஒபாமா நிர்வாகம், கரிசனையோடு கண்காணித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களை இராஜாங்கத் திணைக்களம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

அரச தலைவர்களும், சக்தி வாய்ந்த அமைச்சர்களும் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிப்படையாகவே தலைமை தாங்குவது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அத்துடன் அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்குமாறு சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச விடுத்துள்ள அழைப்புத் தொடர்பான செய்திகளுக்கு அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அதேவேளை ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் டோனஹே, ஏபி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா எதிர்மறையாகவே பிரதிபலிப்பதாகவும், பற்களாலும் நகங்களாலும் அதை எதிர்த்துப் போரிடுவதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ராஜபக்ச அரசாங்கம் அமெரிக்க எதிர்ப்பு அணியில் உள்ள சீனா, ரஸ்யா, கியூபா, வெலிசுவேலா, லிபியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளுடன் கடந்த பல ஆண்டுகளாக கொண்டுள்ள உறவுகள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருந்தது என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment