நடுக்கடலில்
மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை நேற்று
(மார்ச் 1) இலங்கை கடற்படையினர் வெட்டி கடலில் மூழ்கடித்ததாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்.29) சுமார் 600
விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன.இந்தப் படகுகள் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு 4 போர் கப்பல்களில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர்
ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடித்தனர்.
இதனையடுத்து, படகுகள் அனைத்தும் அங்கு மீன் பிடிக்க முடியாமல் ராமேசுவரம் கரையை நோக்கித் திரும்பின. இந் நிலையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரிச்சர்ட், பேரின்பம் உள்ளிட்ட 5 பேருக்குச் சொந்தமான விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், படகில் இருந்த விலை உயர்ந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் தொடர்ந்து அங்கு மீன் பிடிக்க முடியாமல் பெரும் நஷ்டத்துடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.
இலங்கை கடற்படையினர் வலையை மூழ்கடித்ததால், ஒரு படகுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment