அதிகாரங்கள்
இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய
முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது
போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது-
”சிறிலங்காவில் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல்தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் குழுவிடம் கோரியுள்ளோம்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்குமாறு இந்திய நாடாளுமன்றக் குழுவினர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழர் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. அங்கு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ளது. ஆகியன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியக் குழுவினரிடம் எடுத்துக் கூறினோம்.
இராணுவத்தின் கீழ் உள்ள நிர்வாகங்கள் அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் ஒன்றின் கீழ் கையளிக்கப்படும் போது வடக்கு, கிழக்கில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் தமிழர்கள் கௌரவமாக வாழமுடியும் என்று குறிப்பிட்டோம்.
அத்துடன் சிறிலங்கா அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்தும் இந்தியத் தரப்பினருக்கு நாங்கள் விளக்கினோம்.
இதன்போது, பேச்சுக்கள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும், அதற்காக சிறிலங்கா அரசுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் இந்தியக் குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.
இது குறித்து தாம் அக்கறை கொள்வதாகவும், நிறுத்தப்பட்டுள்ள பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரை சந்திக்கும் போது எடுத்துக் கூறவுள்ளதாக, இந்தியக் குழுவின் தலைவி சுஸ்மா சுவராஜ் உறுதியளித்தார்.
சிறிலங்கா அரசின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்தியக்குழுவினர் சுதந்திரமான முறையில் சென்று வடக்கு, கிழக்கில் மக்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்று இந்தியக் குழுவிடம் கூறியுள்ளோம்.
அதிகாரம் இல்லாத அதிகாரப்பரவலாக்கத்தினால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ளது போன்று காணி, காவல்துறை அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் சிறிலங்காவின் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் நாம் வலியுறுத்தினோம்.
வரும் சனிக்கிழமை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கும்போது இது குறித்து, தாங்கள் பேசுவதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.“ என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment