இலங்கைத்
தீவில், நடந்தேறியது போர்க்குற்றம் என்று அனைத்துலக மட்டத்தில் பரவலாக
குறிப்பிடப்படுகிறது. அங்கு நடந்தேறியது ’இனப்படுகொலை’ என்பதை உலகிற்கு
எடுத்துச் சொல்ல வேண்டுமென நோர்வேயில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் பொதுக்கூட்டத்தில் காணொலி ஊடாக உரையாற்றும் போது பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவித்தார்.
நோர்வேயின் ஸ்தவாங்கர் நகரில் கடந்த சனிக்கிழமை அனறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஸ்தவாங்கர் Lura Bydelshus மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்திற்கு இஸ்ரவங்கர், சன்ட்னெஸ் மற்றும் அவற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் பங்கேற்றிருந்தனர்.
இப் பொதுக்கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோர்வே பிரதிநிதி திரு. தோமஸ் அலோசியஸ் பங்கேற்று உரையாற்றினார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி தனதுரையில் அவர் விளக்கமளித்தார். தாயக மக்களுக்கு ஆற்றவேண்டிய உதவிகளுக்காக அனைவரும் கைகொடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. ருத்ரகுமாரன் காணொலி ஊடாக விளக்கவுரையாற்றினார். 2012ம் ஆண்டை விசாரணைக்குரிய ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாண்டில் யார் வேகமாக ஓடுகிறார்களோ அவர்களால் தான் வெற்றிபெற முடியும் என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசின் நீதிபரிபாலனத்தால் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதையும் சுயாதீனமான விசாரணைக்கான சாத்தியக்கூறுகள் அங்கு இல்லை என்பதையும் ஐ.நா மனிதவுரிமைக் குழுவும் தெரிந்துகொண்டுள்ளது. சிறிலங்கா அரச படைகள் தான் படுகொலைகளை மேற்கொண்டன என்பதை மூடிமறைத்து அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவதற்காக சிறிய அளவில் சில இடங்களில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது போன்ற கருத்துகளை சிறிலங்கா அரசு வெளியிடுகிறது. எனவே நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது பெரும் வெற்றியில்லாவிட்டாலும் எமக்கு கிடைத்திருக்கும் வெற்றியின் முதற்படியாகும். இத்தீர்மானம் இன்று உலகில் மாறிவரும் இராஜதந்திர உறவுகளைக் எடுத்துக்காட்டுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் குழு முற்றுமுழுதாக அறவழியில் செயற்படும் என்று கூறுவதற்கில்லை. நலன்சார் அரசியல் இராஜதந்திர நகர்வுகளிலேயே முடிவுகள் தங்கியுள்ளன.
இலங்கைத் தீவில், நடந்தேறியது போர்க்குற்றம் என்று அனைத்துலக மட்டத்தில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் அங்கு நடந்தேறியது ’இனப்படுகொலை’ என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளின் மக்கள் நீதிமன்றங்களில் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்று நிரூபிப்பது முக்கியமானது என்றும் அதுவே ஐ.நா வையும் உலகையும் ஏற்றுக்கொள்ள வைக்க உதவும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொதுக்கூட்ட முடிவில் நான்கு பேர் கொண்ட செயற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு ஸ்தவாங்கர் நகரின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment