வவுனியா: இலங்கையில் வவுனியாவுக்கு அருகில் உள்ள முகாம்களில் அடிப்படை
வசதிகள் எதுவும் இல்லை என்று அங்கு பார்வையிடச் சென்ற இந்திய
எம்.பி.க்களிடம் இலங்கைத் தமிழ் மக்கள் சரமாரியாக புகார்
தெரிவித்துள்ளனர்.தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து
விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் சராமாரியாக
குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு, கொழும்பில் இலங்கை அமைச்சர்களை நேற்று சந்தித்து தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேச்சு நடத்தியது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் ராணுவம் நடத்திய போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிட மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 எம்.பி.க்கள் குழு 6 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது.
தலைநகர் கொழும்பில் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் பற்றி பேச்சு நடத்தினர். அப்போது சுஷ்மா கூறுகையில், ‘‘இலங்கையின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது. வலிமையான இருதரப்பு உறவை எதிர்பார்க்கிறது’’ என்றார்.
இரண்டாம் நாள் பயணமாக இன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பகுதி முகாம்களுக்கு இரண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். கதிர்காமம் மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள முகாம்களைப் பார்வையிட்ட அவர்கள் அங்குள்ள தமிழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முகாம்களில் எந்தவித போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், குறிப்பாக தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் , சரியான பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லை எனவே தங்களைப் பழைய பகுதிகளிலேயே மீள்குடி அமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசு நிதியுதவியுடன் அப்பகுதிகளில் செய்யப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அக்குழு ஆய்வு செய்து வருகிறது.

No comments:
Post a Comment