Sunday, April 22, 2012

சுவிஸ் - ஒஸ்றேலியா - ஒஸ்றேலியா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டங்கள்



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வௌ;வேறு பொதுக்கூட்டங்கள் சுவிஸ், ஒஸ்றேலியா , ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதாக தகவற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானம், தமிழர் போராட்டத்தின் நகர்வுகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கான விளக்கங்கள் உட்டப பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக, இப்பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் :

ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானமும், தமிழர் விடுதலைப் போராட்டமும் எனும் மையப்பொருளில், அரசியல் கருத்தரங்கமாக அமையும் இப்பொதுக்கூட்டம், சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெறுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் 22ம் நாள் ஞாயிற்றுகிழமை, மாலை 15:30 மணிக்கு, Gemeinschaftszentren/ Hertensteinstr 20/ 8052 Zurich (seebach) எனும் முகவரியில் இடம்பெறுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், காணொளி பரிவர்த்தனையூடாக சிறப்புரையாற்றுவதோடு, மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவும் உள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுத்திருந்த, நா.த.அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவின் பிரதிநிதி பேராசிரியர் மணிவண்ணன்(தமிழகம்) அவர்களின் கருத்துக்களும் இடம்பெறவுள்ளது.

இத்தோடு ஐ.நா மனித உரிமைச்சபையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதிகளான துணை அவைத்தலைவர் சுகன்யா , துணை அமைச்சர் சுதன்ராஜ் ,அமைச்சரவை செயலர் சுகிந்தன் ஆகியோரும் இக்கருத்தரங்கில் பங்கெடுக்கவுள்ளனர்.

நா.த.அரசாங்கத்தின் சுவிஸ் உறுதுணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த அரசியல் கருத்தரங்கம் இடம்பெறுகின்றது.

ஜேர்மனி :

எதிர்வரும் ஏப்ரல் 22ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் போகும் நகரில் இடம்பெறுகின்ற இந்நிகழ்வானது, தியாகச்சுடர் அன்னை பூபதியின் வணக்க நிகழ்வினை உள்ளடக்கிய மக்கள் அரங்கமாக அமையவுள்ளது.

பிற்பகல் 1:30 மணிக்கு, Kaltehard str 98/ 44892 Bochum எனும் முகவரியில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் பங்கெடுத்து, செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க இருப்பதோடு , மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

ஒஸ்றேலியா :

ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தினை மையப்படுத்தி ,தமிழர்களின விடுதலைப் போராட்டத்தின் நகர்வினை  பேசுபொருளாக கொண்டு இடம்பெறவுள்ள இந்த பொதுக்கூட்டம், ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 21ம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, ஹோம்புஷ் உயர்நிலை ஆண்கள் பாடசாலை எனும் இடத்தில் இடம்பெறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் சிறப்புரை, காணொளிப் பரிவர்த்தனையூடாக ஒளிபரப்பபடவுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் பரப்புரையில் ஈடுபட்ட நா.த.அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் மற்றும் நிதியமைச்சர் செல்வநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர்.

முள்ளிவாய்க்காலின் பின்னரான சுதந்திர தமிழீழம் நோக்கிய, ஈழத்தமிழர்களின் சனநாயக போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்நிகழ்வுகளில், அனைவரையும் பங்கெடுத்து, ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு தகவற்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

நாதம் ஊடகசேவை
Tamil News Circle

No comments:

Post a Comment