Thursday, May 03, 2012

யாழ்.மேதின ஊர்வலத்தில் புலிக்கொடியைக் காட்டியவர்கள் சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவினரே!?



new-flag
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிhக்கட்சிகளின் கூட்டு மேதின நிகழ்வில் புலிக்கொடியைக் காட்டியவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. சிறிலங்காப்புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்தவர்களே இவ்வாறு புலிக்கொடியைக் காட்டியதாகத் தெரிய வந்துள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும். சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி,நவசமசமாஜக்கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட்ட பத்துக் கட்சிகள் யாழப்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் தமிழ் மக்களை விடவும் தென்னிலங்கையிலிருந்து கொண்க சிங்கள மக்களே அதிகளவில் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
இக்கூட்டுக்கட்சிகளின் மேதின ஊர்வலம் வந்து கொண்டிருந்த போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அருகாமையில் வந்த ஒருவர் திடீரென புலிக்கொடியைக் காட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். ஆனால, பலர் இவ்வாறு புலிக்கொடியைக்காட்டியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் இவ்வாறு புலிக்கொடியைக் கொண்டு வந்திருக்கலாம் என செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் சிறிலஙகாப் புலனாய்வுப்பிரிவினரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் தெரவிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் மேதினத்தை நடத்துவதற்கு அரசாங்கம் பலவேறு முட்டுக்கடடகளைப் போட்டு வந்தது. சிறிலங்காவின் கடும்போக்குப் பேரினவாதக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியும் மேலும் சில கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடவுள்ளதாக மேதினத்திற்கு முன்னதாகவே பிரச்சாரம் செய்து வந்தன..
இந்நிலையில் வேண்டுமென்றே சிறிலங்காப்புலனாய்வாளரைப் பயன்படுத்தி இவ்வாறு மேதினத்தில் புலக்கொடியைப் பயன்பத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலமாக எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தில் புலிகள் ஊடுருவியுள்ளார்கள் என்று கூறி படையினரைக்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்கிற அச்சமும் யாழ்.மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment