Thursday, May 10, 2012

கனடா மிஸ்ஸிஸ்ஸாகா நகரில் நடைபெற்ற 'மண்வானை' நிகழ்வு:


Top News கடந்த மே மாதம் 5ம் நாள் 2012 சனிக்கிழமை கனடா மிஸ்ஸிஸ்ஸாகா நகரில் கனடியத் தமிழர் தேசிய அவையால் தாயக மக்களின் துயர் துடைக்குமுகமாக 'மண்வானை' நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வினை டாக்டர் ராம் சிவலிங்கம், மோகன் இராமகிருஸ்ணன், டாக்டர்.சாந்தகுமார் ஆகியோர் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பல எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், வீணைக் கச்சேரி, வானம்படிகள் புகழ் சிவா, செந்தூரன் அழகையா ஆகியோரின் எழுச்சிப் பாடலும் நடைபெற்றது.
அத்தோடு ந.கோபிநாத் அவர்களின் 'மண்ணிழந்த தேசத்து மலர்கள்' என்னும் கவிதை நூலும் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் அந்நூல் விற்பனையில் கிடைத்த பணம் முழுவதும் மண்வாசைன நிகழ்விற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வில் சேர்க்கப்பட்ட அனைத்து நன்கொடையும் உடனடித் தேவைக்காக வலுவிழந்தோர் சங்கத்திற்கு (வவுனியா) அனுப்பிவைக்கப்பட்டது.
தாயக மக்களின் துயர்துடைக்குமுகமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் தொடர்ந்தும் மண்வாசைன நிகழ்வு நடாத்தப்படும். உணர்வுடன் விழுதுகளாய் நம்தாயக மக்களின் துயர் காப்போம்.
'அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை'.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இனையத்தளம்: www.ncctcanada.ca













No comments:

Post a Comment